97 மீனவர்களுக்கு தோணிகளும், 10,151 குடும்பங்களுக்கு 20 kg அரிசிபொதிகளும் வழங்கிவைப்பு

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் 97 தோணிகளும், 10, 151 குடும்பங்களுக்கு 20 kg அரிசிபொதிகளும்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் மீன்பிடி தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு 97 தோணிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக நேற்றைய தினம் 60 தோணிகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தோம்.

கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வட்டாரத்துக்கான 1/4 ஆண்டு நிதிப் பங்களிப்புடனும், International Medical health Organization அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும் குறித்த தோணிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அதுபோன்றே கௌரவ ஜனாதிபதி அவர்களின் தேசிய திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்திக்காக காத்திருப்பவர்கள், முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு பெறுபவர்கள் போன்ற 10,151 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10kg வீதம் 2 மாதத்திற்கான 20kg அரிசியும் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

2022 மற்றும் 2023 பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் தேசிய ரீதியில் முதலாவதாக எமது மாவட்டத்திலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை பாதுகாக்கும் முகமாக உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பிரதேச செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லே இவ்வாறு அரிசியாக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதே போல் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் 1,40,553 குடும்பங்களுக்கான அரிசுப் பொதிகள் 512 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வுகளின் போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன், விவசாய திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பயனாளிகளென பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்