மீனவத் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 20 தோணிகள் வழங்கிவைப்பு.
மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக நேற்றைய தினம் கோறளைப்பற்று பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 15 ஆற்றுத்தோணிகளும் 05 கடல்தோணிகளும் உள்ளடங்கலாக 20 தோணிகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் வழங்கி வைத்திருந்தார். கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வட்டாரத்துக்கான 1/4 ஆண்டு நிதிப் பங்களிப்புடனும், International Medical health Organization அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும் குறித்த தோணிகள் ஒழுங்கு செய்து வழங்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் இத்தோணிகளுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பினை கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வட்டாரத்துக்கான 1/4 ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்க திட்டமிட பட்டிருந்த போதும். நாட்டில் ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக ஆரம்பத்தில் 50, 000 ரூபாவிற்கு விலை மதிப்புசெய்யப்பட்ட தோணிகளின் விலைகள் திடீரென 120, 000 ரூபாவிற்கு மேற்பட்டிருந்த சூழ்நிலையில் அவ்வேலைகள் இடை நடுவே நின்றுவிடக்கூடாது என்பதற்காக மேலதிக நிதிப்பங்களிப்பிற்காக International Medical health Organization நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அக் கோரிக்கையினை ஏற்று அந் நிறுவனமும் மேலதிக நிதி ஒதுக்கீட்டினை வழங்கி வைத்திருந்தது.
குறித்த நிகழ்வின் போது கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கங்காதரன், எனது இணைப்புச் செயலாளர் திரு. த. தஜீவரன், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.