138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மட்டக்களப்பில் 200 MW (மெகாவோட்ஸ்) மின்சார உற்பத்தி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 200 MW (மெகாவோட்ஸ்) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான துரித நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றையதினம் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதற்கிணங்க இத்திட்டத்தினை விரைவாக முன்னெடுப்பது மற்றும் அதற்கான அனுமதி, இட ஒதுக்கீடு போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டமானது எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ள முதலீட்டாளர்களுக்கான ஆர்வத்தினை தூண்டுவதாக அமைவதுடன் குறித்த திட்டம் அமையவுள்ள இடத்தில் பல தொழில் வாய்ப்புக்களையும் உண்டுபண்ணவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக எதிர்காலத்தில் எமது மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தினை தடையின்றி வழங்ககக் கூடிய சந்தர்ப்பமும் எமது நாட்டிற்க்கான மின்சார உற்பத்திக்கு சிறிதளவான பங்களிப்பினை வழங்கக்கூடிய வாய்ப்பும் உருவாகவுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , துறைசார் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்