சித்தாண்டி மணத்துறைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கான வேலைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு சித்தாண்டி மணத்துறைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியானது நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்டதனை தொடர்ந்து விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , சித்தாண்டி மணத்துறை ஆலய நிருவாகத்தினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நவரெத்தினம் திருநாவுக்கரசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அவ்வீதிக்கான ஆரம்பகட்ட வேலைகளை முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்திற்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக அவ்வீதிக்கான ஆரம்பகட்ட வேலைகளை மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களமானது நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. அவ்வேலைகளை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயத்தினை இன்றையதினம் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் முன்னெடுத்திருந்தார் மேலும் அவ்வீதிக்கான வேலைகளை முழுமையடைய செய்வதற்கு தேவையான மேலதிக ஏற்பாடுகள் அனைத்தும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் வீதியானது முழுமைபெறும் பட்சத்தில் மேற்படி பிரதேசத்திலுள்ள 100 க்கும் அதிகமான ஏக்கர் வயல்காணிகளைக் கொண்ட விவசாயிகள் நன்மையடைவதோடு, சந்தனமடு ஆற்றை அண்டிய பகுதிகளில் வாழும் சிறுதோட்டப்பயிர்ச் செய்கையாளர்களும், விவசாயிகளும் நன்மையடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின் போது சித்தாண்டி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தம்பி திருநாவுக்கரசு மற்றும் நீர்ப்பாசன திணைக்களப் பொறியியலாளர் உட்பட அப்பகுதியினை சேர்ந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், சித்தாண்டி மணத்துறைப் பிள்ளையார் ஆலய நிருவாகிகள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப