தேசிய மட்டத்தில் நடைபெற்ற டைக்குவாண்டோ(Taekwondo) போட்டியில் பதக்கங்களை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேசிய ரீதியில் டைக்குவாண்டோ(Taekwondo) போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு SKO விளையாட்டு களத்தில், அக்கழகத்தின் தலைவர் திரு. K.T பிரகாஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறிப்பாக இதன் போது அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலை மட்ட டைக்குவாண்டோ(Taekwondo) போட்டியில் பங்குபற்றி தேசியரீதியில் இம்மாவட்டத்திற்கான முதலாவது வெண்கலப்பதக்கத்தினை ஈட்டித்தந்து வரலாற்று சாதனை புரிந்த புனித மிக்கேல் கல்லூரி மாணவன் திரு. டியோன் செலர் மற்றும் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவன் திரு. V. கிருஷாந்தன் போன்றோர் விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் மேலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் கராத்தே(Karate) மற்றும் டைக்குவாண்டோ(Taekwondo) போட்டிகளில் பங்குபற்றி சாதனைகளை புரிந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எமது கட்ச்சியின் கௌரவ தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு அம்மாணவர்களை கௌரவப்படுத்தியிருந்தார். அத்துடன் 2006ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 13 பதக்கங்களை தேசிய மட்டத்தில் இக்கழகம் வென்றெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

குறித்த இந்நிகழ்வின்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. முகுந்தன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா,அதிபர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள், SKO விளையாட்டு கழகத்தின் செயலாளர் மதுபன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப