மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகளை நேரில் சந்தித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கெளரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் உள்ள கட்டுமுறிவு ஆண்டாள்குளம் அ.த.க  வித்தியாலய மாணவிகள் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டியதை முன்னிட்டு மாணவிகளை நேரில் சந்தித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கெளரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் மாணவிகளுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அத்தோடு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவுக்கமைவாக குறித்த பாடசாலையின் தேவைகள் தொடர்பில் பாடசாலை அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது பாடசாலை மைதானம் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளதென்பதும் , பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைக் கருத்திற் கொண்ட இராஜாங்க அமைச்சர் மேற்படி கோரிக்கைகளை ஏற்று மிக விரைவில் அதற்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
 இதன்போது  கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அவர்கள் , கோறளைப்பற்று  வடக்கு வாகரை தவிசாளர் திரு கண்ணப்பன் கணேசன் அவர்கள் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கல்வி கலை கலாச்சார செயலாளர் திரு சந்திரசேகரன் மணிசேகரன் அவர்கள் , வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அமைப்பாளர்,  கட்டுமுறிவு கிராம குழுக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் (இணைப்பாக்கம்) யோகராச சந்திரகுமார் அ

Video

திகிலிவெட்டை பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்தி மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் மு

Video

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சேம்பையடி ஆற்றுக்குக் குறுக்காக பாலம் அ

Video

''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவா