கதிரவெளி பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சரின் பங்கேற்றலுடன் ப்ரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு சமூக சேவைகளை செய்த செய்வித்த அமரர் விநாயகம் கிருபைராசா அவர்களின் 07ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் விக்னேஸ்வரா இளைஞர் கழகம் ஆகிய இரண்டு கழகங்களின் ஒழுங்கமைப்பின் கீழ் பொ.மதிவேந்தன் தலைமையில் நேற்றைய தினம் விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும் வாகரைப் பிரதேச சபை தவிசாளர் திரு G.கணேசன் அவர்கள் , வாகரை பிரதேச செயலாளர் திருG.அருணன் அவர்கள், கதிரவெளி கிராம சேவையாளர் திரு S.விஜயராஜன் அவர்கள், கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திரு S.அரசரெட்ணம் அவர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் திரு S.சுரேஷ்குமார் அவர்கள் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பரிசுப் பொருட்களை அன்பளிப்புச் செய்த மற்றும் நிதி உதவி வழங்கிய ஆர்வலர்கள், மாதர் சங்கங்கள், ஆலய நிர்வாக சபை, விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்