'பசுமையானதொரு தேசம்'' தேசிய வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம்.

'பசுமையானதொரு தேசம்'' தேசிய வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம்.

அரசாங்கத்தின் ''பசுமையானதொரு தேசம்'' தேசிய வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை உருவாக்கும் திட்டமானது நேற்றைய தினம் நாடு பூராவும் சம்பிரதாய பூர்வமாக காலை 09. 18 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. குறித்த தேசிய நிகழ்வினை ஒட்டியதாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டமானாது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் பகுதியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி நேற்றுமுதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி திணைக்களங்கள் மற்றும் பிரதேசசெயலகங்களினூடாக பயனாளிகளுக்கான மரக்கன்றுகள் பயிர் நாற்றுக்கள் போன்றவை விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வுகளின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. கருணாகரன் கோறளை பற்று கிரான் பிரதேச செயலாளர் திரு. ராஜ்பாபு , விவசாய அமைச்சின் செயலாளர்கள் ,சமுர்த்தி முகாமையாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப