முறக்கொட்டான்சேனை பகுதியில் 30.4 மில்லியன் ரூபா பெறுமதியான பல்சேவை கட்டிடத்தொகுதி.

கோறளைப்பற்று முறக்கொட்டான்சேனை பகுதியில் 30.4 மில்லியன் ரூபா பெறுமதியான பல்சேவை கட்டிடத்தொகுதி.

கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டான்சேனை பகுதியில் உலக வங்கியின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 30.4 மில்லியன் ரூபா பெறுமதியான பல்சேவை கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நேற்றையதினம் நடப்பட்டது.

குறித்த பல்சேவை கட்டிடம் ஆனது 2020 ஆம் ஆண்டு கோறளைப்பற்று பிரதேச சபையினால் தயாரிக்கப்பட்ட நான்காண்டு அபிவிருத்தித் திட்டத்தில் நேரடியான மக்கள் வாக்கெடுப்பின் போது முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வுகளின் போது தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கௌரவ. சந்திரகாந்தன் நினைவுச்சின்னங்களை வழங்கிவைத்ததுடன் அம்மாணவர்களின் வெற்றிக்காக முன்னின்று உழைத்த பெற்றோர்களையும் பொன்னாடை அணிவித்து கௌரவித்திருந்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ திருமதி. சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின்போது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு, கோறளைப்பற்று பிரதேசபையின் செயலாளர் திரு. நவநீதன் கோறளைப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் கௌரவ. த.யசோதரன் கோறளைப்பற்று பிரதேச சபையின் வாழைச்சேனை உறுப்பினர்களான கௌரவ. சுதர்சன் கௌரவ. மணிசேகர் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. நிர்மலா சுரேஷ் குமார் மற்றும் நலன்விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப