பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு.

25/ 01/ 2022 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு. அரசாங்கத்தின் ''நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு'' கொள்கைப் பிரகடனத்திற்கமைய நேற்றையதினம் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சேவைக்கு இணைப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்திருந்தனர். குறித்த நிகழ்வுகளின் போது மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கருணாகரன் உட்பட மேலதிக அரசாங்க அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கலான துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப