குறைந்த,நியாயமான விலையில் பொருட்கொள்வனவு செய்யும் முகமாக COOP Fresh வியாபார நிலையம்.

வவுணதீவு பிரதேசத்தில் குறைந்த நியாயவிலையில் பொருட்கொள்வனவு செய்யும் முகமாக COOP Fresh வியாபார நிலையம்.

மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு பகுதியில் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள COOP Fresh வியாபார நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்றையதினம் ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறிப்பாக பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்ற இக்காலப்பகுதியில் அப்பகுதியில் வாழும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறைந்த நியாயமான விலையில் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாகவே இக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்ததாக இக் COOP Fresh வியாபார நிலையத்தினை கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வுகளின்போது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சுதாகர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான திரு. அஸ்மி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதிக்கான கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. நா. உருத்திரமூர்த்தி, துறைசார் அதிகாரிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி

Video

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.

Video

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச

உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த