30 மில்லியன் ரூபா செலவில் 1 கிலோமீட்டர் நீளமான மகிழடித்தீவு தெற்கு 4ம் குறுக்கு வீதி.

30 மில்லியன் ரூபா செலவில் 1 கிலோமீட்டர் நீளமான மகிழடித்தீவு தெற்கு 4ம் குறுக்கு வீதி.

கிராமிய உட்கட்டுமானங்களை விருத்தி செய்யும் பயணத்தின் தொடர்சியாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மகிழடித்தீவு தெற்கு, கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 4ம் குறுக்கு வீதிக்கான ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் நேற்றையதினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

மகிழடித்தீவு தெற்கு மக்களின் நீண்டகால தேவையாக இருந்த 1 கிலோமீட்டர் நீளமான இவ் வீதியானது 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு மிக விரைவில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

எமது கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ பூ. பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், ம. தெ.மே. பிரதேச சபை உறுப்பினரும், பிரதேச கிளையின் செயலாளருமான ம. குகநாதன், பிரதேச கிளையின் தலைவர் ரமேஷ், கட்சியின் மகிழடித்தீவு தெற்கு கிராமிய தலைவர் க. தயாகரன். மகிழடித்தீவு கிராமிய தலைவர் காமராஜ். பிரதேச கிளையின் நிர்வாகிகள், கிராமிய நிர்வாகிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி

Video

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.

Video

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச

உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த