தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய குழுக்களினால் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் ஒழுங்கு செய்யப்பட்ட “காணும் பொங்கல்”நிகழ்வு.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய குழுக்களினால் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் ஒழுங்கு செய்யப்பட்ட “காணும் பொங்கல்”நிகழ்வு.

தைப்பொங்கல் தினத்தில் இருந்து மூன்றாம் நாள் நடைபெறுகின்ற “காணும் பொங்கல்’’ நிகழ்வு என்பது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்டு கழிக்கின்ற ஒரு பொங்கல் தினமாக அமைகின்றது.

இந் நிகழ்வானது கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் மண்முனை வடக்கு பிரதேசசெயலக கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கலை கலாச்சார நிகழ்வுகள்ளுடன் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலாக அந் நிகழ்வு அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச தலைவர் குமாரசாமி காந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிராமிய குழுக்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச குழுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டதுடன் கல்வி கலை கலாச்சார நிகழ்வுகள் மண்முனை வடக்கு பிரதேச குழுவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சின் பொது செயலாளர் கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தமிழர்கள் பரந்து வாழும் ஏனைய பிரதேச செயலகங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய குழுக்களினால் இக் காணும் பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப