மின்குமிழ் வசதியுடன் கூடிய புதிய கரப்பந்தாட்ட மைதானம்.

மின்குமிழ் வசதியுடன் கூடிய புதிய கரப்பந்தாட்ட மைதானம்.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் அண்மையில் புதிதாக அமைத்து அதற்கு நந்தகோபன் விளையாட்டரங்கு என பெயர் சூட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பிலுள்ள கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தமது பயிற்சி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கும் வண்ணமாகவும் எதிர்காலத்தில் இம் மைதானத்தை பயன்படுத்தி மாவட்ட மற்றும் மாகாண, தேசிய ரீதியில் தமது சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்புதிய நந்தகோபன் கரப்பந்தாட்ட மைதானத்தினை நிறுவியுள்ளார்.

அதனுடன் இணைந்ததாக இரவு வேளைகளிலும் வீரர்கள் தமது பயிற்சி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வண்ணமாக மைதானத்தைச் சுற்றி மின்குமிழ் வசதிகளையும் ஒழுங்கு செய்து வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வுகளின் போது கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் உட்பட துறைசார் அதிகாரிகள், கழக உறுப்பினர்கள் கரப்பந்தாட்ட வீரர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப