புதிய சமுர்த்தி வங்கி, முயற்சியாளர்களுக்கனா குளிர்சாதன பெட்டிகள்,வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள்.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் புதிய சமுர்த்தி வங்கி, முயற்சியாளர்களுக்கான குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள்.

நேற்றைய தினம் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் அப்பிரதேச மக்களின் நலன் கருதி சமுர்த்தி வங்கி ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் திறந்துவைத்திருந்தார். அரசாங்கம் தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு நாடுபூராகவுமுள்ள கிராமங்கள் தோறும் உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயபொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் வண்ணமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயபொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி வீதத்திலான சிறுகடன் வசதிகளை ஒழுங்கு செய்து வழங்கும் முகமாகவும் சமுர்த்தி பயனாளிகளுக்கிடையே சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் குறித்த கிரான் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் சமுர்த்தி வங்கியினை கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்துடன். மீன்பிடி, மரக்கறி மற்றும் ஐஸ்கட்டி விற்பனையில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கான குளிர்சாதன பெட்டிகளையும் வழங்கிவைத்திருந்தார்.

அத்துடன் அப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீடுகள் இல்லாதவர்களுக்கான 10 ற்கு மேற்பட்ட வீடுகளை ஸ்தாபிப்பதற்கான காசோலைகளையும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கியிருந்தார்.

குறித்த நிகழ்வுகளின்போது கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்,சமுர்த்தி பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் உட்பட துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப