1.5 மில்லியன் ரூபா செலவில் வாகரை கண்டலடி விளையாட்டு மைதானம்.

1.5 மில்லியன் ரூபா செலவில் வாகரை கண்டலடி விளையாட்டு மைதானம்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினுடைய முன்னெடுப்பின் கீழ் இலங்கை பூராகவும் 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அண்மைக்காலமாக பல மைதானங்களை அமைக்கும் மற்றும் புனரமைக்கும் வேலைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் முன்னெடுத்து வருகின்றார்.

அதனடிப்படையில் 1.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட கண்டலடி விளையாட்டு மைதானத்தினை கௌரவ தலைவர் நேற்றைய தினம் திறந்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளில் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேஷன், ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் கௌரவ அருந்திருநாவுக்கரசு, துறை சார் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்