சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்துடனான கலந்துரையாடல்.

 

சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்துடனான கலந்துரையாடல். கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனவர்களுக்கும் சித்தாண்டி வானவில் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்குமிடையேயான கலந்துரையாடல் வானவில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் நிந்தகுமார் மற்றும் வானவில் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கெட் அணித் தலைவர் நவநீதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜூம் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடல்களின் போது வானவில் விளையாட்டுக்கழகத்தின் நீண்ட காலத் தேவைகள் தொடர்பாகவும், சித்தாண்டி மக்களின் பொதுவான தேவையாக காணப்படும் விளையாட்டு மைதானம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடல்களின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளரும் அயலக உறவு பணிப்பாளருமான மதி குமாரதுரை உட்பட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப