கனடா நாட்டிற்கான புகலிடக்கிளை.

கனடா நாட்டிற்கான புகலிடக்கிளை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கனடா நாட்டிற்கான புகலிடக்கிளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

தாயகத்தில் வாழும் எம் இனத்தின் இருப்பினையும் அரசியல் பலத்தினையும் உறுதிப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அடுத்த கட்ட பயணமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அயலக உறவுகளிடையே கட்சிக்கொள்கையினையும், பணிகளையும் விரிவுபடுத்தி அவர்களின் ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் பக்கபலமாக கொண்டு எமது சமூகத்தின் வளமான எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்பும் முயற்சியின் தொடர்ச்சியாக கனடா நாட்டிற்கான புகலிடக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் தலைமையில் ஜூம் காணொளி மூலமாக இடம்பெற்றது.

குறித்த கனடா நாட்டின் புகலிடக் கிளை பிரதம ஒருங்கிணைப்பாளராக திரு. சாந்தலிங்கம்

பரணீதரன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

குறித்த நிகழ்வுகளின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அயலக உறவு பணிப்பாளரும் ஊடக செயலாளருமான மதி குமாரதுரை, கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்டாலின் ஞானம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மிக விரைவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகளுக்கான அயலக உறவுக்கிளை அங்குரார்ப்பன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்