மகாவலி நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம்.

மகாவலி நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம்.

நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் மேய்ச்சல் தரையினை அண்டிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயமானது மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் கால்நடைகளுக்கான போதிய குடிநீர் வசதியின்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக மகாவலி அபிவிருத்தி ''B'' வலய வலதுகரை வாய்க்கால் திட்டத்தினுள் உள்வாங்கப்படும் மூன்று குளங்களிலும் பண்ணையாளர்களின் கால்நடைகள் எதுவித தடையுமின்றி நீர் அருந்துவதற்கான தீர்மானங்களை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்வதோடு, அம்பாறை மாவட்டத்தின் ''MTK'' குளத்திலிருந்து மட்டக்களப்பு கிரான் பிரதேசம் வரை முன்னெடுக்கப்படும் 85 KM நீளமான குறித்த மகாவலி ''B''வலய வலதுகரை வாய்க்கால் திட்டத்தினூடாக வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏறாவூர்பற்று மற்றும் கோறளைப்பற்று விவசாயிகளுக்கான போதியளவு நீரினை பெற்றுக்கொடுத்து அவர்கள் தங்களது விவசாய நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயங்களின் போது காணி தொடர்பிலான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. முகுந்தன், கச்சேரி நிருவாகிகள், பிரதேசசெயலக நிருவாகிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், நில அளவைத்திணைக்கள அதிகாரிகள், கால்நடை சுகாதார வைத்திய திணைக்கள அதிகாரிகள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப