100, 000 அரச நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 124 பேருக்கான நியமனம்.

100, 000 அரச நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 124 பேருக்கான நியமனம்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ஷத்தின் நோக்கு வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வருமானம் குறைந்த ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 124 பேருக்கான பயிலுனர் நியமனங்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் 27/10/2021 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கோரளைப்பற்று வடக்கு வாகரை, ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 124 பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

குறித்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 48 நியமனங்களும், இரண்டாம் கட்டமாக 124 நியமனங்களுமாக மொத்தமாக 172 நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்