வாழ்வாதார மற்றும் சுயதொழில் உள்ளூர் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்கள்.

 

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்யா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக உற்பத்தி கிராமங்களை உருவாக்கி சுய பொருளாதாரம் மற்றும் உள்ளூர் உற்பத்தி போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக சமுர்த்தி பயனாளிகள் பெண்கள், தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ளவர்கள் கூடுதலாக உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டுமான வசதிகளையும் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வசதிகளையும் மேம்படுத்தி ஆக்கமும் ஊக்கமும் அளித்து பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க தேவையான முயற்சிகளையும் அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை யாவருமறிந்த உண்மை. அந்த வகையில் கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்கள் நேற்றைய தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சங்கேணி, சின்னஊறணி, திராய்மடு ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து பனம் பொருள் சௌபாக்கியா உற்பத்திக் கிராமமாக ஆரம்பித்துவைத்துள்ளார். குறித்த சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனம் பொருள் உற்பத்தியில் ஆர்வம் கொண்ட தொழில் முயற்சியாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தேவையான பயிற்சிகளை வழங்கி, உற்பத்தியினை மேம்படுத்தி அவற்றை சரியான முறையில் சந்தைப்படுத்தவும் ஏற்றுமதி செய்யவும் அதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் நிலையான வருமானத்தை பெற்றுக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வுகளின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ஏ.சுதர்சன், மாவட்ட பனை அபிவிருத்தி சபை முகாமையாளர் கே.எஸ் .நாகேஸ்வரன், எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள், மாவட்ட பனை அபிவிருத்தி சபை பயிற்சி நெறிக்கான ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப