''உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கான காசோலைகள்.

''உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கான காசோலைகள். அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு ''உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 31 பயனாளிகளுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்தினம் சிவப்பிரியா மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட முகாமையாளர் ஜெகநாதன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்