எதிர்வரும் 2022ம் ஆண்டு பாதீட்டிற்கமைய மூன்று மில்லியன் ரூபா நிதி ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும்.

எதிர்வரும் 2022ம் ஆண்டு பாதீட்டிற்கமைய மூன்று மில்லியன் ரூபா நிதி ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு கிராமத்துடனான கலந்துரையாடல் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்குமென மூன்று மில்லியன் ரூபா நிதி எதிர்வரும் 2022 பாதீட்டிற்கமைய ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வேலைத்திட்டத்தினை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி உறுப்பினர் கௌரவ. சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் அந்தந்த பிரிவுகளிலுள்ள கிராமிய அபிவிருத்தி குழுக்கள் விளையாட்டுக் கழகங்கள் ஏனைய சமூகஅமைப்புகளுடன் இணைந்து குறித்து நிதியினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிதி ஒதுக்கீடானது வாழ்வாதாரத்திற்க்கென 40% மும் உட்கட்டமைப்பு வசதிக்கென 40% மும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கென 10%மும் சமூக நல மேம்பாட்டுக்கென 10% முமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்குமென ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்