வில்லுக்குளத்தினை அண்டியபிரதேசங்களில் விவசாயத்தினை அதிகரிக்க திட்டம்
வில்லுக்குளத்தினை அண்டியபிரதேசங்களில் விவசாயத்தினை அதிகரிக்க திட்டம்
மண்முனை வாவியின் அம்பிளாந்துறை பகுதியில் கலக்கும் நவகிரி வடிச்சல் நீரை கற்சேனை சுப்ரமணியம் அணைக்கட்டு மூலம் வில்லுக்குளத்துக்கு கொண்டு வரும் திட்டத்தை, த. ம. வி. பு கட்சியின் கௌரவ செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் பார்வையிட்டார்.
நவகிரி குளத்திலிருந்து நீர் பாசனத்திற்காக பெறப்படும் நீர் நாவற்கேணி, காயாம்வட்டை ஊடாக சீனித்தம்பி அணைக்கட்டை அடைந்து, சுப்பிரமணியம் அணைக்கட்டு வழியாக அம்பிளாந்துறை பகுதியில் உப்பாற்றில் கலந்து வீண்விரயமாகும் நீரை, சுப்ரமணியம் அணைக்கட்டிலிருந்து ஆனைவிழுந்தான் ஊடாக வில்லுக் குளத்துக்கு கொண்டுவரும் திட்டமானது செயற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும்போது வில்லு குளத்திலிருந்து நீர்ப்பாசனத்தை பெறும் பகுதிகளான அம்பிளாந்துறை, கடுக்காமுனை கரச்சை, பண்டாரியாவெளி, மகிழடித்தீவு படையான்டகுளம் போன்ற பகுதிகளில் மேலும் அதிகமான இடைப் போகத்திற்காக காணிகளை உள்வாங்க முடியும் என்பதோடு, மடைப்போகத்திற்காக மேலும் காணிகளை உள்வாங்கக் கூடியதாகவும் இருக்கும்.
மண்முனை வாவியில் கலந்து வீண்விரயமாகும் மேற்படி வடிச்சல்நீரை வில்லுக்குளத்துக்கு கொண்டுவந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அதிகப்படியான காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் மேற்படி திட்டத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்..வில்லுக்குளத்தினை அண்டியபிரதேசங்களில் விவசாயத்தினை அதிகரிக்க திட்டம்
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்