கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக கிரான் பிரதேசசெயலகப் பிரிவில் பல வேலைத்திட்டங்கள்

அனைவருக்கும் தெரிந்திருக்கும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவானது யுத்த அனர்த்தங்கள் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்த ஒரு பிரதேச செயலகபிரிவாகும்.

அந்தவகையில் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக முயற்சியுள்ள மக்களை இனங்கண்டு அவர்களின் தேவையறிந்து உட்கட்டுமானங்களையும், உபகரணங்களையும் வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளித்து பொருளாதார ரீதியில் மேம்பட்ட தன்னம்பிக்கை மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் காணப்படுகின்றது.

அதற்கிணங்க தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிநூடாக விவசாயம் மற்றும் பயிர்செய்கையினை மேம்படுத்தும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நீர்ப்பம்பிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அணிவகுப்பு உபகரணங்கள், சௌபாக்கியா கோழி வளர்ப்பு உற்பத்தி கிராமத்துக்கான உபகரணங்கள், கோழித்தீன் பைகள் போன்றவற்றினை நேற்று முன்தினம் கிரான் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளின்போது கோறளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப