மட்டக்களப்பு திராய்மடு சுவஸ் கிராமத்திற்கான 1011 மீட்டர் நீளமான கொங்கிரீட் வீதி.

ஒரு பிரதேசத்தின் உள்ளூர் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் அதிக தாக்கம் செலுத்துபவையாக வீதி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் எமது கட்சியின் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வீதிகளை புனரமைப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்துளார். அதனடிப்படையில் சுமார் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து அவற்றில் கணிசமானவற்றை முடித்து மக்கள் பாவனைக்காக கையளித்துமுள்ளார்.

இதற்கிணங்க நேற்றையதினம் 1011 மீட்டர் நீளமான திராய்மடு வீடமைப்பு திட்ட வீதிக்கான வேலைகளையும் கொங்கிரீட் இட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். இந் நிகழ்வின் போது எமது கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்