மட்டக்களப்பு திருப்பெருந்துறையினை மையப்படுத்தியதாக நடைபாதை, மற்றும் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.

நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அழகு படுத்தும் முகமாக பல திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்றைய தினம் திருப்பெருந்துறையினை மையப்படுத்தி நடைபாதை மற்றும் உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கான திட்டமிடலுக்கான களவிஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இத்திட்டத்தின் மூலமாக இவற்றை பயன்படுத்தும் மக்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியம் மிக்க வளமான சமூகமாக எதிர்காலத்தில் வலுப்பெறவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்

உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத

அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான