புணானை கிழக்கு குகநேசபுர மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு.

எமது மாவட்டத்தின் பல பகுதிகளில் காணி தொடர்பான பிரச்சினைகள் மக்கள் மத்தியில் செறிந்து காணப்படுகின்றன. அதில் குறிப்பாக அந்தப் பிரதேசத்தில் பிறந்த பிரதேசவாசிகளுக்கே காணி இல்லாத சூழ்நிலை மற்றும் பிற இடங்களில் இருந்து வருபவர்கள் தமது செல்வாக்கினை பயன்படுத்தி காணிகளை ஆக்கிரமித்தல் போன்ற பல பிரச்சனைகளை குறிப்பிடலாம். இதனை கருத்தில் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அரசாங்கம் என்ற வகையிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக பாடுபடும் பொறுப்புமிக்க கட்சியின் தலைவர் என்ற வகையிலும் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் நீண்ட காலமாக காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத புணானை கிழக்கு குகநேசபுர கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரத்தினை எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.

இதன் மூலம் அந்த மக்கள் தமது வாழ்வாதார மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகளை தொடர்ந்து சிறப்பாகமேற்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை சரியாக திட்டமிட்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இதுபோன்று எதிர்காலத்திலும் எமது மாவட்டத்தின் பல இடங்களில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வினையுப் பெற்றுக்கொடுக்க அவர் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை. இந் நிகழ்வில் வாகரை பிரதேசசபை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி. முகுந்தன், மாகாண காணி உதவி ஆணையாளர்.திரு. G. ரவிராஜன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திரு.சு. ஹரன் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஆ. சுதாகரன், மாவட்ட செயலக தலைமைக் காணி உத்தியோகத்தர் திருமதி. கு. ஈஸ்பரன் ஆகியோர் உட்பட ஏனைய அதிகாரிகள், பயனாளிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. .

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப