திகிலிவெட்டை கிராமத்தினை சௌபாக்கிய உற்பதிக்கிரமமாக வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு.

கிராமங்களின் உற்பத்தியினை அதிகரித்து சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இன்றைய சூழ்நிலையில் எமது மக்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப சிறந்த வழி.

நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் உற்பத்திக் கிராமங்களை உருவாக்கி எமது மண்ணை நம்பி வாழும் மக்களின் உள்ளூர் உற்பத்தி, சுயதொழில் வாய்ப்பு போன்றவற்றை ஊக்குவித்து எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திகிலிவெட்டை கிராமத்தினை உற்பத்திக் கிராமமாக வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன் அப் பிரதேச மக்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் தெளிவுட்டல் நிகழ்ச்சியினையும் ஒழுங்கு செய்திருந்தார்.

இதன்போது கால்நடை உற்பத்தி தொடர்பாக குறிப்பாக நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மிகவும் உகந்த மேட்டு நிலங்களை அதிகம் கொண்ட பிரதேசம் என்பதனால் அது தொடர்பான விரிவான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் உரிய அதிகாரிகள் மூலமாக வழங்கிவைத்திருந்தார்.

அத்துடன் கோரளைப்பற்று தெற்கு திகிலிவெட்டை கிராமத்தில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் ஈடுபடவுள்ள முயற்சியாளர்களுக்கு தேவையான வங்கி நடவடிக்கைகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஒழுங்கு செய்து கொடுத்தல் போன்ற முக்கிய விடயங்களும் ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாபு மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி கொரளை பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டமை

Video

ஏனைய செய்திகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி

Video

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.

Video

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச

உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த