நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்ய உறுதுணையாக அமையும் சேதனப்பசளை உற்பத்தியினை ஊக்குவித்தல்.
அரசாங்கத்தினுடைய நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவும் அப்பிரகடனத்தினை மேம்படுத்தும் வகையில் பாரிய அளவிலான சேதனப்பசளைகளை உற்பத்தி செய்யும் சந்திவெளி கிராமத்தில் அமைந்துள்ள எம்.வி.கே கனிஷ்கா கூட்டுப்பசளை நிறுவனத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும் படி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம்.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில் தற்பொழுது தான் 2000 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான சேதனப்பசளைகளை உற்பத்தி செய்வதாகவும் இதன் மூலம் 50 பேருக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் தனது தொழில் முயற்சியினை மேம்படுத்த 5 ஏக்கர் காணிகள் தனக்கு தேவைப்படுவதாகவும் இதன் மூலம் 5000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு தேவையான சேதனப் பசளைகளை தடையின்றி விநியோகிக்க முடியும் எனவும் இதன் மூலம் 100 பேருக்கு அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தோம்.
மேலும் இதுபோன்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை அமுலாக்குவதற்கு உறுதுணையாக அமைகின்ற தொழில் முயற்சியாளார்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்களும்,அரசாங்கமும் தொடர்ந்தும் தயாராகவுள்ளோம்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த