Video

இறால் வளர்ப்பு திட்டம்

எமது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட முதலீட்டுத் திட்டமாக இறால் வளர்ப்பு திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட தொடர் அயராத முயற்சி காரணமாக இந்த இறால் வளர்ப்புத் திட்டம் அரசாங்கத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முதலைக்குடா, மகிழடித்தீவு பிரிவுகளில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெரிய அளவிலான முதலீட்டாளர்களும்  நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களும் ஆர்வமுள்ள சிறியரக முதலீட்டாளர்களும் முதலிடக்கூடிய வகையில் இத்திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது எல்லா வகையான முதலீட்டாளர்களும் பயன்பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்

 1. இட்ட  முதலீட்டுக்கான அதிககூடிய  இலாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டமுடியும்.
 2. அரச உதவி, வங்கிகளில் இலகு கடன் மற்றும் நன்கொடைகள் பெறும் வசதி உண்டு
 3. தொழில்நுட்ப உதவி, பீடைகளுக்கான மருந்து வசதி மற்றும் குஞ்சுகள் NAQDA  நிறுவனத்தினால்  வழங்கப்படும்
 4. சர்வதேச ரீதியில் இறாலுக்கு அதிக கிராக்கி நிலவுவதால் சந்தைப்படுத்தல் பிரச்சனை இல்லை துணிந்து முதலிடலாம்.
 5. ஆனால் NAQDA நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் அவசியம்

முதலீட்டுக்கான காணிகளும் முதலிடும முறையும்.

 1. மொத்த  இறால் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட மொத்த காணிகள் 387 ஏக்கர்.
 2. மொத்த காணியும் முதலீட்டாளர்களின் வசதிக்காக பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 • பெரியளவிலான முதலீட்டுக்கான காணி 125 ஏக்கர் இதில் ஒவ்வொரு காணித் துண்டும் 20 தொடக்கம் 50 ஏக்கர் அளவிலாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு  முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும். இதில் பெரும் தொகை பணத்தை உடையவர்களும் முதலிடலாம். இலாபமும் அதிகளவில் பெற முடியும். இதில் யாரும் முதலிட முடியும்.
 • நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களுக்கான காணி 150 ஏக்கர் இதில் ஒவ்வொரு கணித்துண்டும் 10 ஏக்கர் அளவிலானதாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தகவர்கள் மாத்திரம் முதலிட முடியும்.
 • சிறிய அளவிலான முதலீட்டாளர்களுக்கான காணியின் அளவு 112 ஏக்கர் இதில் ஒவ்வொரு காணித்துண்டும்  2 ½ ஏக்கர் ஆக பிரிக்கப்பட்டு சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் முதலிட வாய்ப்பு அளிக்கப்படும். இது குறிப்பாக அப்பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும்.

ஏற்கனவே இது சமந்தமாக பிரதேச  செயலாளருக்கோ  அல்லது வேறு தரப்பினருக்கோ  விண்ணப்பித்து இருந்தாலும் இந்தப் பத்திரிகை விளம்பரத்திற்கு அமைய எல்லாவகை முதலீட்டாளர்களும் திரும்பவும் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை தலைவருக்கு  குறிப்பிட்ட எல்லாவகை ஆதாரங்களுடனுன் 04.06.2021  க்கு முன்  விண்ணப்பிக்க வேண்டும்.

விளம்பரத்தில் கோரப்பட்டுள்ள முதலீட்டாளர்களுக்கான தகுதிகள் வருமாறு.

 1. தொழில் முயற்சியாளரின் பொதுவான தகவல்.
 2. தொழில் முயற்சியாளரின் சட்டரீதியான நிலவரம்.
 3. தொழில் முயற்சியாளர் நிதிசார் ஆற்றலை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள்.
 4. நீர் உயிரின வளர்ப்பில் உள்ள அனுபவம்.
 5. இந்தச் செயல் திட்டங்களுக்கான மீன் முட்டைகளை வழங்கும் ஆற்றல் தொடர்பான விவரம்.
 6. தொழில்நுட்ப  ஆளணியினர்களின் விவரங்கள்.
 7. நீர் உயிரின வளர்ப்பு தொழில் துறை தொடர்பாக எந்தவொரு  நீதிமன்றத்தினாலும் அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பொன்றினாலும் தொழில் முயற்சியாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படவில்லை என்பதற்கான சத்தியபிரமாணம் ஒன்று.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் 04.06. 2021 பிற்பகல் 2.00 மணிக்கு முன் கிடைக்கக் கூடிய வகையில்  உங்கள் விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 
இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை,
இல.41/1  புதிய பாராளுமன்ற வீதி,
பெலவத்த,
பத்தரமுல்ல,

தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில்: “Expression of interest-provision of lands for aquaculture” என தவறாமல் எழுதவும்.

இது சம்பந்தமான  முழுவிவரத்தையும் 04.05.2021 தினகரன் மற்றும் daily news போன்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ).

இது சம்பந்தமான மேலதிக  தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது:

உதவிப்பணிப்பாளர் (கரையோர)
Telephone no.: 011 2786578 / 071 8055360.
Fax: 011 2786493.
Email: adcad@naqda.gov.lk

ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவு நடைபெற இருப்பதால், சரியாகவும், முறையாகவும்  கேட்கப்பட்ட சகலவிபரங்கள், ஆவணங்களுடன் விண்ணப்ப  முடிவுத்  திகதிக்கு முன் அனுப்பி  வைப்பது சிறந்ததாகும். 

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் ஆலோசனை வழங்கவும் மேலும் நிர்வாக ரீதியாகவும் ஏனைய தொழில்சார் விடயங்களிலும் வேண்டிய உதவிகளைச்செய்து ஊக்குவிக்க என்றும் தயாராக உள்ளது. ஆகவே இதற்கான தெளிவூட்டல்களை வளக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரியாலயத்தில் ஏட்படுத்தப்பட்டிருந்த போதும் கொரோனா நோய்த்தாக்கத்தின் காரணமாக நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் எங்களது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரியாலய தொலைபேசி இலக்கத்திற்கு (065 2227682) தொடர்பினை ஏற்படுத்தி வழிகாட்டல்களை பெறமுடியும்.

குறிப்பாக சிறிய முதலீட்டாளர்கள் மண்முனை தென்மேற்கு  பிரதேசசெயலாளர் பிரிவுக்கு தொடர்புகொண்டு உங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

நன்றி.

நாங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்ததைப் போன்று மண்முனை தென்மேற்கு பிரதேசத்தினை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இதுவரையான காலப்பகுதியில் இறால் வளர்பிற்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப் பரிட்சை எதிர்வரும் 2021.05.24 மற்றும் 2021.05.25 ஆகிய தினங்களில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபமும் கீழே உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிருவாக ரீதியான உதவிகளுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரியாலயத்தினை தொடர்புகொள்ள கீழ் உள்ள இலகத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும்.
0652227682 / 0770475511

 

 

Main image
படம்
இறால் வளர்ப்பு திட்டம்