பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையை மீளமைக்கும் திட்டத்தில் சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மகிழடித்தீவு மற்றும் முதலைக்குடா கிராம சேவகர் பிரிவுகளை அண்டிய நிலப்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இறால் பண்ணையை மீளமைக்கும் திட்டத்தில் சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது குறித்த இறால் வளர்ப்பு பண்ணைக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், சுற்றாடல் அதிகார சபை மற்றும் நெக்டா நிறுவனத்தினுடைய அனுமதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்ததோடு, இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சவால்கள், சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் காணப்படும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
இதன் போது இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்பதை கவனத்தில் கொண்டு, குறித்த செயல் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பண்ணையின் செயற்பாடுகளை விரைவு படுத்தி ஆரம்பிப்பதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திரு. சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ரவிக்குமார், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜிவரன் உட்பட துறைசார் அதிகாரிகள் பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான