ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்திக்கு அமைவாக பொருளாதார நலிவு நிலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திறமையுள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர உயர்தர மாணவர்கள் 6000 பேருக்கும், புலமை பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வானது, இந்து கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்ரினா முரளிதரன் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா, அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமை பரிசில்களை வழங்கி வைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் உட்பட கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான