சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு இரண்டாம் கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக காசோலைகள் வழங்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பயனாளிகள் விண்ணப்பித்திருந்த போதிலும் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து காசோலைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது அதன் இரண்டாம் கட்ட காசோலைகள் தெரிவுசெய்யப்பட்ட13 பயனாளிகளுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன் ஆகியோரால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட சமூக சேவை இணைப்பாளர் அருண்மொழி உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான