கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் 22 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 16 கிரெவல் வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதுடன் நீர்வழங்கல் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்கள் எனும் கருத்திட்டத்திற்கமைய மாவட்டம் பூராகவுமுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்து காணப்படும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் உட்கட்டுமானங்களை விருத்திசெய்யும் முகமாக அங்கு அமைக்கப்பட்ட 16 கிரெவல் வீதிகளையும் நீர்வழங்கல் திட்டத்தினையும் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைத்திருந்தார்.

அதற்கமைய கோறளைப்பற்று வடக்கு புனாணை கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் புனரமைக்கப்பட்ட 2ம் குறுக்கு விவேகானந்தா வீதி, 6ம் குறுக்கு காந்தன் வீதி, 5ம் குறுக்கு வள்ளுவர் வீதி, 7ம் குறுக்கு தம்பிமுத்து வீதி, 8ம் குறுக்கு வேலுப்பிள்ளை வீதி, தேவாலய வீதி, இணைப்பு வீதி,1ம் குறுக்கு வீதி, 2ம் குறுக்கு வீதி, 3ம் குறுக்கு வீதி, 5ம் குறுக்கு வீதி, 4ம் குறுக்கு வீதி, 8ம் குறுக்கு வீதி மற்றும் வட்டவான் கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட துறையடி வீதி, சித்தி விநாயகர் வீதி, பொதுக்கட்டிட குறுக்கு வீதி என்பன சுமார் 22 மில்லியன் செலவில் கிரெவல் வீதிகளாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருந்தது. அதனுடன் இணைந்ததாக சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட வட்டவான் புதிய கிராம மக்கள் மிக நீண்ட காலமாக எதிர் நோக்கி வந்த குடி நீர் பிரச்சனைக்கு தீர்வாக நீர்வழங்கல் திட்டத்தினையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக அன்றைய தினமே ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளில் போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் அருணன், மாவட்ட செயலக பொறியியலாளர் சுமன், உதவிப் பிரதேச செயலாளர் பிரணவன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஜதீஷ்குமார் மற்றும் நிர்மல், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவினுடைய உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சுதர்ஷன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தேசிய அமைப்பாளர் தம்பிராஜா தஜிவரன், மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப