மீனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் தலைமையில்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவ சமாசமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மீனவ சம்மேளனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு தெளிவுபடுத்தியிருந்ததுடன் விசேடமாக டைனமிக் மற்றும் சுருக்கு வலை மூலம் மீன் பிடிப்பதில் தாம் எதிர் நோக்கும் பாதகமான விளைவுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் நவீன முறை மீன்பிடியினை விஸ்திரனப்படுத்துதல் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்ஷான் குரூஸ், மட்டக்களப்பு மாவட்டகடற்படை பிரிவின் பொறுப்பதிகாரி , பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர் சசி புண்ணியமூர்த்தி, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜீவரன் உட்பட மீன்பிடி திணைக்கள பரிசோதகர்கள், மீனவ சம்மேளன தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான