வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 15 வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் நந்தகோபன் அவர்களின் 15 வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் முகமாகவும் விலகல் முறையிலான கரப்பந்தாட்ட சுற்று போட்டியானது அண்மையில் அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கரப்பந்தாட்ட சுற்று போட்டியானது 23 அணிகளின் பங்கேற்புடன் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அதன் இறுதிநாள் நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், குட்வின் வைத்தியசாலை உரிமையாளர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்