மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 14 மில்லியன் ரூபாய் செலவில் கற்சேனை விநாயகர் அணைக்கட்டுக்கான வேலைகள் ஆரம்பம்
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஷசீந்திர ராஜபக்ச அவர்களிடம் மத்திய நீர்ப்பாசன திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்திற்குரிய நீர்ப்பாசன வேலைகளுக்கான நிதியினை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அதன் முதற்கட்டமாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்கு 13 வேலைகளும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கு 10 வேலைகளுக்குமான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 23 வருடங்கள் புனரமைக்கப்படாமல் காணப்பட்ட மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் கற்சேனை விநாயகர் அணைக்கட்டுக்கான வேலைகள் சுமார் 14 மில்லியன் ரூபாய் செலவில் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளரும் எந்திரியுமான N.நாகரெத்தினம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்ப்பாசன அமைச்சினால் அமுல்படுத்தப்படுகின்ற காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறையின் கீழ் நாடுபூராகவும் நேற்றையதினம் காலை 10.01 மணியளவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நேற்றையதினம் கற்சேனை கிராமத்தில் விநாயகர் அணைக்கட்டுக்கான கல் வைக்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கெளரவ சதாசிவம் வியாழேந்திரன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ராஜகோபால், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த. தஜீவரன் உட்பட துறைசார் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்