20 இலட்சம் செலவில் செப்பனிடபட்ட திகிலிவெட்டை சந்திவெளி படகு பாதை நேற்று முதல் சேவையில்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட திகிலிவெட்டை, குடும்பிமலை,பேரில்லாவெளி, கோறாவெளி, பொண்டுகள்சேனை, அக்குரானை, முறுத்தானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஈரளக்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் 2010 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியினை அடைந்து தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்குமாக சந்திவெளி ஆற்றினை சுற்றி பல மைல் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

அதனை கருத்திற்கொண்ட தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சிபாரிசின் மூலம் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை துரிதப்படுத்தும் முகமாக வெருகல் மற்றும் கிண்ணியா பாலங்கள் உள்ளடங்கலாக 9 பாலங்களை அமைத்தபோது வெருகல் ஆற்றினை கடப்பதற்கு பயன்படுத்திய படகு பாதையினை கனரக வாகனம் மூலம் சந்திவெளி ஆற்றிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தார். அதன் காரணமாக ஆற்றிற்கு அப்பால் வசித்து வந்த மேற்குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தமது போக்குவரத்தினை நேரவிரையமின்றி விரைவாகவும் சுமூகமாகவும் முன்னெடுத்துவந்தனர்.

எனினும் தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் குறித்த பாதை பழுதடைந்த

நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்காரணமாக மேற்குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மீண்டும் தாம் போக்குவரத்திற்கு பலத்த அசௌகரியங்களையும் நேர விரையங்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் அப்பாதையினை சீர் செய்து தருமாறும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய கோறளைப்பற்று பிரதேச சபையினூடாக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த படகு பாதையினை சீர் செய்து மீண்டும் மக்கள் பாவனைக்காக நேற்றையதினம் கையளித்திருந்தார்.

அநேகருக்கு தெரிந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது தனது 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கமைவாக குறித்த திகிலிவெட்டை மற்றும் சந்திவெளி போன்ற பிரதேசங்களை இணைப்பதற்கான பாலத்தினை நிர்மாணிக்க பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்திருந்த போதிலும் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அவ்வேலைகளை தொடர முடியாத சூழ் நிலை தோற்றம் பெற்றுள்ளது. இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் இவ்வசாதாரண சூழல் நீங்கப் பெறும் பட்சத்தில் குறித்த பால வேலைகளை விரைவாக நிறைவுறுத்த தேவையான அனைத்து வித முன்னாயத்த நடவடிக்கைகளையும் எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் முனைப்போடு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு, திகிலிவெட்டை சந்திவெளி கிராம சேவகர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்