தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் ( 25/ 05/ 2023 ) இடம்பெற்றது. அதன் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் போது எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கௌரவ தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் சில முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டது.

அவையாவன

01. எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

02. இதுவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பில் மிக தீவீரமாக ஆராய்ந்து இறுக்கமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

03. மேலும் கோறளை பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்பற்று, மண்முனைப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள எல்லைப்புற கிராமங்களில் தமிழரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் முன்மொழிய பட்டது.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்