மட்/ ககு/நாசிவந்தீவு வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவானது வித்தியாலய அதிபர் T.ஜெயப்பிரதீபன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு எமது கல்வி, கலை,கலாச்சார, விழுமியம் சார்ந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்வுகளை கண்டுகளித்ததுடன் சாதனையாளர்களை கெளரவித்து பரிசுப் பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார்.

மேற்படி நிகழ்வின் போது கல்குடா வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் S.தட்சணாமூர்த்தி, கல்குடா வலய PSI இணைப்பாளர் S.சிவவரதன், சமூக இணைப்பாளர் N.இராசலிங்கம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்