வாழைச்சேனை கலைவாணி கலாமன்றத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் கலைவாணி கலாமன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக அம் மன்றத்தின் தலைவர் சு.டிலக்சன் தலைமையில் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அதனுடன் இணைந்த இசை நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் தமது சாதனைகளை வெளிப்படுத்திய சாதனையாளர்களை பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்தியதுடன், அதன் போது இடம்பெற்ற இசை நிகழ்விலும் பங்கேற்றிருந்தார். மேலும் கலைவாணி கலாமன்றத்தினால் இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குருக்கள் முத்துலிங்கம் சண்முகம் ஐயா, கோறளைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகரெட்ணம் கமலநேசன், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த பண்டார, சமுர்த்தி உத்தியோகத்தர், சாதனையாளர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்