அமிர்தகழி விளையாட்டு கழக பிரீமியர் லீக் – 2023” சுற்றுப் போட்டி

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அமிர்தகழி விளையாட்டு கழகத்தினால் ”பிரீமியர் லீக் – 2023” சுற்றுப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பாட்டாளிபுர விளையாட்டு மைதானத்தில் நேற்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அவ் விளையாட்டு கழகத்தின் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த குறித்த சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அமிர்தகழி கிராமத்திற்கென தனியானதோர் விளையாட்டு மைதானம் இன்மை காரணமாக குறித்த கழக வீரர்கள் பாட்டாளிபுர மைதானத்தில் தமது ”பிரீமியர் லீக் – 2023” சுற்றுப் போட்டியினை ஒழுங்குசெய்திருந்தனர். அக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக மட்டுமண்ணின் வரலாற்று சிறப்புமிக்க பழங்கிராமங்களுள் ஒன்றான அமிர்தகழி கிராமத்திற்கான புதிய விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்துள்ளார். அதுவரை அப்பகுதி இளைஞ்ஞர்கள் தற்காலிகமாக தமது பயிற்சி நடவடிக்களுக்காக பயன்படுத்தும் ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான வளாகத்தினையும் விளையாடுவதற்கு உகந்த வகையில் செப்பனிடத் தேவையான வேலைகளையும் முன்னெடுத்துள்ளார். அத்துடன் குறித்த கழக உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று அக்கழக உறுப்பினர்களுக்கான 60 சீருடைகளையும் வழங்கிவைத்திருந்தார்.
குறித்த நிகழ்வின் போது முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கௌரவ ரவீந்திரன் ஹரிபிரசாத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான கௌரவ ரொணி பிரின்சன் உட்பட அமிர்தகழி விளையாட்டு கழக உறுப்பினர்கள், பார்வையாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் உறுப்பினர்களிடமிர

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட