460 மில்லியன் ரூபாவுக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்.

மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக நீர்ப்பாசன அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 460 மில்லியன் ரூபா வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு.

அதனடிப்படையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை நீர்பாசனத்திற்குரிய நாவற்காடு வாய்க்கால் திருத்தப்பணிகள் நேற்றையதினம் நாவற்காடு நெல்லிச்சேனை பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஷசீந்திர ராஜபக்ச மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் போன்றோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டத்தினூடாக இதுவரை பெரும்போகம் மாத்திரம் செய்துவந்த 100 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகளில் சிறுபோக நெற்செய்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த 460 மில்லியன் ரூபா நிதியினை பயன்படுத்தி இவ்வேலைத்திட்டத்துடன் மேலும் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுவினூடாக உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாகவும் விவசாயத்தினை மேம்படுத்தும் முகமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வின் போது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கலாமதி பத்மராஜா, நீர் பாசன திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர், உலக வங்கி திட்டத்தின் பிரதி பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், மத்திய மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட துறைசார் அரசு உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்