எமது மாவட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சினால் 460 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள்
மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக எமது மாவட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சினால் 460 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள்.
மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக நீர்ப்பாசன அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள 460 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான விசேட கூட்டமானது இன்றையதினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்பாசன அமைச்சினால் உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மாவட்ட அபிவிருத்தி குழுவினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலை திட்டங்களுக்காக முதற்கட்டமாக 460 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக குளங்களை புனரமைப்பது மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான நீர்ப்பாசன திட்டங்களை முன்னெடுப்பது போன்றவற்றிற்காக குறித்த நிதியானது பயன்படுத்தப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டமானது மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு மத்திய நீர்பாசன திணைக்களத்தினூடாக 350 மில்லியனுக்கான வேலைகளும், மாகாண நீர்பாசன திணைக்களத்தினூடாக 100 மில்லியன் பெறுமதியான வேலைகளும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 50 மில்லியன் பெறுமதியான வேலைகளும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் சிபாரிசின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விடையங்கள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டமாகவே இன்றைய கூட்டம் அமைந்திருந்தது.
இதில் விவசாய பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் முன்னுரிமைப்படுத்தப் பட்டிருந்தது.
மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசாயம் போன்றவற்றை மேம்படுத்தும் முகமாக குளங்கள் புனரமைப்பு மற்றும் நீர்ப்பாசன வேலைத்திட்டங்களுக்காக முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த 460 மில்லியன் ரூபா நிதியினை மாவட்ட அபிவிருத்தி குழுவானது முழுமையாக பயன்படுத்தும் பட்சத்தில் அடுத்தடுத்த கட்டமாகவும் நிதிகளை ஒதுக்குவதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஷசீந்திர ராஜபக்ச உறுதிமொழி வழங்கியிருந்தார்.
குறித்த விசேட கூட்டத்தின் போது நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஷசீந்திர ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் கௌரவ. சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கலாமதி பத்மராஜா, நீர் பாசன திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர், உலக வங்கி திட்டத்தின் பிரதி பணிப்பளாளர்கள், பிரதேச செயலாளர்கள், மத்திய மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட துறைசார் அரசு உத்தியோஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான