உடைந்து விழுந்த கிரான் பால வேலைகள் நேற்று முதல் ஆரம்பம்.

அண்மையில் அனர்தத்திற்குள்ளாகி உடைந்து விழுந்த கிரான் பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாதை அமைக்கும் வேலைகள் 25 மில்லியன் ரூபா செலவில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி குறித்த பாலம் அதீத வெள்ளம் காரணமாக உடைந்து விழுந்திருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்கள் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு அவ்விடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார்.

அதற்கிணங்க மறுநாளே (30/ 12/ 2022) அப்பகுதிக்கு விஜயம் செய்த அதிகாரிகள் இராஜாங்க அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். அதனடிப்படையில் அப்பாலமானது மாகாண சபையின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும், அதற்கு பதிலாக ஒரு தற்காலிக பாதையினை அமைக்க வேண்டுமாயின் சுமார் 25 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுமெனவும், அவ்வளவு பணம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் இல்லை எனவும் அறிக்கையிட்டிருந்தனர்.

இருந்தபோதிலும் அப்பகுதியில் சுமார் 23, 000 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகளில் விவசாயம் செய்யப்பட்டுள்ளமையினையும், மிக விரைவில் அறுவடைகள் முன்னெடுக்கப்படவுள்ளதனையும் கருத்திற்கொண்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்கள் உடனடியாக மாகாணசபையின் கீழுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திடமிருந்து குறித்த வேலைகளை பொறுப்பேற்று தனது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்து அப் பாலத்திற்கு பதிலாக புதிய பாதையினை விரைவாக நிர்மாணிக்கும் முகமாக தனது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிலிருந்து 25 மில்லியன் ரூபாவினை ஒதுக்கி நேற்றைய தினம் வேலைகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மிகவிரைவாக இம்மாத இறுதிக்குள் குறித்த பாதை சீர்செய்யப்பட்டு வழமைபோன்று அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்