112 பயனாளிகளுக்கு பல மில்லியன் பெறுமதியான வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்கள்

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும், அவர்களின் உற்பத்தி மற்றும் சுயதொழில் முயற்சிககளை ஊக்குவிக்கும் வண்ணமாகவும் பல வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்களை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் அண்மையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார்.

இதன் போது 112 பயனாளிகளுக்கு பெறுமதியான மின்கருவிகள், தோணிகள் ,கைத்தறி நெசவு உபகரணங்கள், குளிர்சாதன பெட்டிகள், தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் என பலவகைப்பட்ட வாழ்ந்தாரா மேம்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வி.வாசுதேவன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்