வாகரை ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் கட்டிட திறப்பு விழா

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வாகரை ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன் அம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அலுவலக செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட கட்டிடம் ஒன்றினையும் திறந்து வைத்திருந்தார்.

குறித்த ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்க்கான நிலம் மற்றும் கட்டிடங்கள் என்பன கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்து வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அக்கட்டிடங்கள் பல்வேறு குறைபாடுகளை கொண்டமைந்திருந்தமையால் world vision நிறுவனமானது அக்கட்டிடத்தின் திருத்த வேலைகளுக்காக கூடுதலான பங்களிப்பினை செய்திருந்தது.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளின் போது பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை திறம்பட வழிநடத்திய ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகத்தினர் போன்றோருக்கு பொன்னாடைகள் அணிவித்து, நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது வாகரைப் பிரதேச சபை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன் , கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான ஜினித்திரன், வக்சலாதேவி, ரோகினி, வாகரை பிரதேச செயலாளர் திரு.அருணன், வாகரை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்