உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கிவைப்பு

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமியக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/ உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்களை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்

மாவட்டத்தின் கல்வித் தரத்தினை மேம்படுத்த வேண்டும் , எல்லைப்புற கிராமங்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்த வேண்டும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல செயற்பாடுகள் எமது கட்சியின் கௌரவ தலைவரினால் மாவட்டம் பூராகவும் பரந்து பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்களை வழங்கிவைத்துள்ளோம்.

இதன் போது , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு, கிராம சேவகர் திரு.சசிதரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டு ரங்கன் உட்பட ஏனைய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட குழு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , மீனவர் சங்க உறுப்பினர்கள் , விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் , மாணவர்கள் ஆசிரியர்கள். பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்