முறக்கொட்டான் சேனை சமூகமட்ட அமைப்புகள் தமது பிரதேசம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ தலைவர் சந்திரகாந்தன் அவர்களுடன்.

முறக்கொட்டான் சேனை மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் முறக்கொட்டான் சேனை மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பிரதேச நலன் விரும்பிகள் போன்றோர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களை சந்தித்து தமது பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளையும் பெற்றுதருமாறு கோரியிருந்தனர்.

*குறிப்பாக அதன்போது முறக்கொட்டான்சேனை வாவியை ஊடறுத்துச் செல்லும் நீர்மார்க்க போக்குவரத்தை திறம்பட முன்னெடுக்க தேவையாகவுள்ள போர்ட் என்ஜினுக்கான கோரிக்கையும்.

*அதேபோன்று முறக்கொட்டான் சேனை மாரியம்மன் ஆலய நிர்வாகிகளினால் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள மீன் சந்தை இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கு பதிலாக மரக்கறி சந்தை அமைத்து தரும்படியான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

*மேலும் தேவபுரம் முறக்கொட்டான் சேனை பிரதேசத்துக்கு உட்பட்ட மணல் வீதிகள், சேதமடைந்த நிலையல் உள்ள வீதிகள் என்பவற்றை புனரமைத்து தரும்படியான கோரிக்கைகளும்

*அத்துடன் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொது வேலைத்திட்டங்கள், அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்கள் தொடர்பிலான கோரிக்கைகள், விளையாட்டு மைதானத்திற்கு தேவையான பொருட்கள் ,வீதி விளக்குகள் போன்றவற்றை பொருத்துவதற்கான கோரிக்கைகள் போன்றனவும் முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை செவிமடுத்த இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடையங்களையும் முடிந்தவரை விரைவாக செய்துதருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் திரு. ஆறுமுகம் தேவராஜ் மற்றும் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் போன்றோரும் கலந்துகொண்டிருந்தனர் .

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான